yarlathirady.com

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தபடவிருந்த பெறுமதியான பொருள் பறிமுதல்.

[2026-02-27 15:00:20] Views:[21]

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை தமிழ்நாடு பொலிஸார் நேற்று (26) பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக்குக் கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் இருந்த குறித்த முந்திரிப் பருப்பின் பெறுமதி இந்திய ரூபாயில் சுமார் 15 லட்சம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பைபர் படகு, இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகனங்களில் இருந்து படகிற்கு முந்திரி மூட்டைகளை மாற்றிக்கொண்டிருந்த போது பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது இருவர் கடலில் குதித்துத் தப்பினர். ஒருவர் மட்டும் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.