yarlathirady.com

T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகினார் ஹசரங்க; அவருக்கு பதிலாக துஷான் ஹேமன்த..!!

[2026-02-11 12:27:48] Views:[28]

இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்றுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் எஞ்சிய போட்டிகளில் உபாதைக்குள்ளான இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனிந்து ஹசரங்கவுக்குப் பதிலாக துஷான் ஹேமன்தவை இணைத்துக்கொள்ள ஐசிசி குழு அனுமதி வழங்கியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆரம்ப T20 உலகக் கிண்ணப் போட்டியின்போது உபாதைக்கு மத்தியில் துல்லியமாக பந்துவீசி 3 விக்கெட்களைக் கைப்பற்றிய வனிந்து ஹசரங்க அணியிலிருந்து விலகியுள்ளது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் அவர் அணியிலிருந்து நீங்கியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அப் போட்டியில் இடது தொடை தசைப் பகுதியில் ஏற்பட்ட வலியுடன் இரண்டாவது ஓவரை வீசிய வனிந்து ஹசரங்க அதன் பின்னர் அரங்கை விட்டு வெளியேறினார். 8ஆவது ஓவருடன் வெளியேறிய அவர் 13ஆவது ஓவரில் களம் நுழைந்து 15ஆவது ஓவரில் உபாதையைப் பொருட்படுத்தமால் அணியின் வெற்றிக்காக மீண்டும் பந்துவீசி தனது 4 ஓவர்களைப் பூர்த்தி செய்தார்.

அப் போட்டியில் அவர் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு நடத்தப்பட்ட ஸ்கான் பரிசோதனையின்போது அவரது இடது தொடை தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய அவர் உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தனது அடுத்த இரண்டு போட்டிகளை கண்டி பல்லேகலை விளையாட்டரங்கில் விளையாடவுள்ளது. ஓமானுக்கு எதிரான போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியும் மிக முக்கிய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி பெப்பரவரி 16ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து இலங்கையின் ஸிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் பெப்ரவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.