யாழ்ப்பாணத்தில் வெடி பொருட்கள் மீட்பு.
[2026-02-09 19:59:29] Views:[17]
யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து ஒரு அளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்றையடித்தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பின்னால் உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தை சுத்தம் செய்யும் போது, துப்புரவுத் தொழிலாளர்கள் சந்தேகத்திற்கிடமான ஒரு பொதியை கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு குறித்த பொதியை பரிசோதித்தனர்.
உள்ளே ஒரு கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










