வடக்கில் மீண்டும் மழை: விவசாயிகளுக்கான முக்கிய அறிவித்தல்.
[2026-02-08 12:12:33] Views:[14]
வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா, மாகாணங்களில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை கிடைக்க தொடங்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை முதல் எதிர்வரும் 11.02.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையற்ற வானிலை நிலவும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா, மாகாணங்களில் மழை கிடைக்க தொடங்கும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழையற்ற, மழையுள்ள நாட்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.










