யாழ்.மருதங்கேணி இலங்கை வங்கி கிளையின் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது
[2026-02-05 20:11:38] Views:[14]
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கி கிளையின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இது தொடர்பில் மருதங்கேணி இலங்கை வங்கியின் முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
07-2-2026 முதல் மருதங்கேணி இலங்கை வங்கிக் கிளையின் சேவைகள் சனிக்கிழமைகளிலும் காலை 08.30 மணியிலிருந்து பிற்பகல் 1:30 மணி வரை வாடிக்கையாளர்களின் நலன் கருதி விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சனிக்கிழமைகளிலும் அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வதால் அவர்களில் பலர் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டே இலங்கை வங்கியின் மருதங்கேணி கிளை தன்னுடைய சேவையை சனிக்கிழமை நாளில் இவ்வாறு விஸ்தரித்துள்ளது.










