இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
[2026-02-03 22:12:08] Views:[13]
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் காவல்துறையினர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த தயாராக வைக்கப்பட்டிருந்த 194 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
97 மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சா, ஒரு ரகசிய தகவலின் பேரில் ECR கடற்கரை சாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, வாகனத்தையும் 40 வயதுடைய ஓட்டுநரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைகளுக்காக ராமநாதபுரம் போதைப்பொருள் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த போதைப்பொருளுடன் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.










