yarlathirady.com

யாழ்ப்பாண தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்

[2026-02-02 21:17:52] Views:[10]

அனுராதபுரத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இடம்பெற்ற யாழ் ராணி தொடருந்து சேவை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

டித்வா சூறாவளி, வெள்ளம் காரணாக சேதமடைந்த தொடருந்து பாதை திருத்த வேலைகள் காரணமாகவே தொடருந்து சேவைகள் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த தொடருந்து சேவை கடந்த 01ஆம் திகதி முதல் காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காங்கேசன்துறையில் இருந்து காலை 6.00 மணிக்கு யாழ் ராணி தொடருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓமந்தையில் இருந்து மாலை 03.45 இற்கு காங்கேசன்துறை நோக்கி குறித்த தொடருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சேதமடைந்த தொடருந்து பாதைகளை புனரமைப்பதற்காக கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் தொடருந்துகள் ஜனவரி 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.