10 பாலங்களை இலங்கைக்கு அனுப்பிய இந்தியா
[2026-02-02 21:16:05] Views:[17]
டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை கடந்த 01ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவால் இலங்கைக்கு வழங்குவதட்கு முன்வந்துள்ள 450 மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதாரப் பொதியின் இந்த பாலங்கள் ஒரு அங்கமாகும் என கூறப்படுகிறது.
இந்த பாலங்கள் இலங்கைக்கு வந்தடைந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை உடனடியாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.










