தரம் 06 கல்வி மறுசீரமைப்பு குழுவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்!
[2026-01-31 11:21:53] Views:[12]
கல்வி மறுசீரமைப்பு குறித்த, சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான திட்டவரைபை முன்மொழிவதற்காக நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி விவகாரங்கள் சபையின் முன்னாள் தலைவர் கலாநிதி உபாலி மாம்பிட்டிய, முன்னாள் உறுப்பினரும், கொழும்புப் பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் மொஹமட் மஹீஸ் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் பத்மசிறி ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.










