yarlathirady.com

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவித்தல்..!

[2026-01-27 19:23:51] Views:[17]

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்படவுள்ளது.

அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.