தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் யாழ்ப்பாணத்துக்கு 05 விருதுகள்..!
[2026-01-26 07:45:13] Views:[12]
கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பில் அமைந்துள்ள கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் கடந்த சனிக்கிழமை இவ்விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தேசிய மட்டத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பித்துரை குணத்திலகம், செல்வம் அபிராமி, த.அக்டோபர் ஷரா மற்றும் எஸ். வயோமிகா ஆகியோரே இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.










