பனிப்பொழிவால் நுவரெலியாவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு..!
[2026-01-25 20:44:29] Views:[12]
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன.
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் துகள் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் உஷ்ணமான காலநிலையும், மாலை வேளையிலும் பனிமூட்டம் நிலவி வருகின்றது. பனிமூட்டத்துடன் கூடிய அதிகரித்த கடும் குளிரான காலநிலையும் மாறுபட்டு காணப்படுகின்றன.
இவ்வாறு நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர் இவ்வாறான குளு குளு காலநிலையை அனுபவிக்க இலங்கையில் மட்டுமில்லாது, வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.










