yarlathirady.com

பெரும் தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய 11 நபர்கள் கைது!

[2026-01-24 20:28:40] Views:[11]

தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 270 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் நடத்திய இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், முதற்கட்டமாக ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதிலிருந்து சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நெடுநாள் மீன்பிடிப் படகும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அந்தப் படகிலிருந்து மேலும் ஆறு சந்தேகநபர்கள், இரண்டு செய்மதித் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் சுமார் 70 கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.