யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்..!!
[2026-01-22 14:51:46] Views:[13]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குடத்தனை - வலிக்கண்டி பகுதியில் இன்று காலை இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.










