நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: கடற்படையின் முக்கிய அறிவிப்பு..!!
[2026-01-21 15:11:25] Views:[12]
நெடுந்தீவுக்கான படகு சேவைகள் நிறுத்தப்பட்டு பயணிகள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதால், வடதரகையை செயல்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி நெடுந்தீவு பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலாளர் என். பிரபாகரன் மற்றும் கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி இடையே நேற்றைய தினம் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது, உள்ளூர் மக்கள், அதிகாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சமீபத்தில் கடலோர வழிசெலுத்தல் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பிரதேச செயலாளர் விளக்கினார்.
மேலும், தினசரி வடதரகை, குமுதினி மற்றும் சமுத்திர தேவா படகுகள் தற்போது செயல்படாததால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை முடிவுக்குக் கொண்டுவர வடதரகையை செயல்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி தெரிவித்தார்.










