யாழில் நடந்த விபரீதம்: அரியாலையில் வீடு தீக்கிரை..!!
[2026-01-18 21:42:46] Views:[11]
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் நேற்று மாலை வேளையில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ, எதிர்பாராத விதமாக வீட்டின் கூரையில் பரவியதில் வீடொன்று பகுதி அளவில் தீக்கிரையாகியுள்ளது.
அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள், நேற்று தங்கள் வீட்டு வளவிற்குள் சேர்ந்திருந்த குப்பைகளைச் சேகரித்து அதற்குத் தீ வைத்துள்ளனர்.
குப்பைகள் எரிந்துகொண்டிருந்த வேளையில், அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
குப்பையில் பற்றி எரிந்த தீயின் வீச்சு, காற்றின் காரணமாக அருகில் இருந்த வீட்டின் கூரைப்பகுதிக்குத் பரவியுள்ளது.
இதனால் வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை அவதானித்த அயலவர்கள், உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்த முனைந்தனர். அயலவர்களின் துரித மற்றும் சமயோசித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த விபத்தில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.










