yarlathirady.com

இன்று இடம்பெற்ற கோர விபத்து; சாரதி பலி - பலர் காயம்..!!

[2026-01-18 21:30:08] Views:[35]

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (18) காலை ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது.

அந்த நேரத்தில் சாரதி அக் கதவை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண் திட்டில் மோதி வீதியிலேயே கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து காரணமாக வீதியின் ஒரு வழித்தடம் தடைப்பட்டுள்ளதுடன், அந்தத் தடையை விரைவாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.