தலையில் தேங்காய் விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு!
[2026-01-17 19:08:47] Views:[11]
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தலையில் தேங்காய் விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார். இதன்போது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது.
பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுக் (16) காலை உயிரிழந்துள்ளார்.










