இறக்குமதி பால்மா விலை குறைப்பு!
[2026-01-15 20:34:13] Views:[13]
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 50 ரூபாவினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அமுலாகும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.










