இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்: பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது !
[2026-01-15 20:22:58] Views:[15]
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் 28 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (14) மதியம் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து சுப்பர்மடம் கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 28 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் 23 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










