யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள 500 வீடுகள்..!!
[2026-01-13 11:58:33] Views:[12]
யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு ஒதுக்கியுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் எம். பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள வீட்டுத் திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் செயலாளர் மரதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
சுற்றறிக்கையின்படி வீட்டுத் திட்ட பயனாளிகளின் பட்டியலைத் தேர்ந்தெடுத்து வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டு பணம் பெறாதவர்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர்களிடம் அவர் யாழ் மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டார்.










