யாழில் தொடருந்துடன் மோதி இளைஞன் ஒருவர் மரணம்.
[2026-01-11 21:53:32] Views:[16]
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை பயணித்த தொடருந்துடன் விபத்து ஏற்பட்டுள்ளது.
அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொடருந்து மோதி விபத்துக்கு உள்ளான நிலையில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் குறித்த நபர்ஸ் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளதாக கூறப்படுகிறது.










