யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்.
[2026-01-10 21:28:11] Views:[12]
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் புதிய உதவி பிரதேச செயலாளராக திருமதி துஷியா கஜமுகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்திற்கான கடிதத்தினை அவர் நேற்று முன்தினம் (08.01.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, திருமதி துஷியா கஜமுகன் அவர்கள் அன்றைய தினமே யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் தமது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.










