வட மாகாண 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் புத்தகம் வெளியீடு.
[2026-01-08 21:18:56] Views:[20]
வடக்கு மாகாண சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் புத்தகம் (நிதி அறிக்கை) அதிகாரப்பூர்வ வெளியீடுவடக்கு மாகாண சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் புத்தகம் (நிதி அறிக்கை) அதிகாரப்பூர்வ வெளியீடு கடந்த 7ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன் பொது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் என். வேதநாயகன் 2026 ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
விழாவின் போது, ஆளுநர் வடக்கு மாகாண சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, அதை அமைச்சுக்களின் செயலாளர்கள், துணைத் தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் தலைமை கணக்காளர்களிடம் வழங்கினார்.










