மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் - பா.உ சந்திரசேகரன்.
[2026-01-08 21:03:05] Views:[10]
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் – அமைச்சர் சந்திரசேகரன்நாட்டின் வருமானத்துக்காகவும், மக்களின் ஊட்டச்சத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு முக்கிய ஒழுங்குவிதிகள் மற்றும் மீனவர்களின் நலன்கள் குறித்து நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .










