[2026-01-07 22:43:23] Views:[15]
யாழ்ப்பாணம், கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட முன்னாயத்தக் கூட்டம் நேற்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், நெடுந்தீவு கடற்படை கட்டளை அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு திருவிழாவின் போது பக்தர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் மற்றும் இனங்காணப்பட்ட குறைபாடுகளை இம்முறை நிவர்த்தி செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.