யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி சோதனை: நால்வர் கைது.
[2026-01-07 22:40:11] Views:[13]
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதைமாத்திரைகள் என்பன சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போது 24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.










