இவ்வருடத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு...!
[2026-01-05 14:29:37] Views:[12]
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான வானிலையால் டெங்கு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையிலேயே, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், வைத்தியரிடம் சிகிச்சை பெற தாமதிக்க வேண்டாம் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.










