யாழில் எச்சரிக்கையை மீறும் சுற்றுலா பயணிகள்..!!
[2026-01-05 14:20:59] Views:[10]
எச்சரிக்கையை மீறி தாளையடி கடலுக்குள் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வருகின்றனர்.
இருப்பினும் இவ் கடற்கரையானது பாதுகாப்பு இன்றி காணப்படுவதால் கடல் பரப்புக்குள் இறங்க வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகள் அதிவித்த போதும் அதனை பொருட்படுத்தாமல் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்கி நீராடுகின்றனர்.
தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் மற்றும் உங்கள் பாதுகாப்பு கருதி புகைப்படங்கள் எடுக்கும் போது ஆழமான பகுதிளுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.










