yarlathirady.com

இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை..!

[2026-01-05 14:00:03] Views:[27]

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மூன்று நாட்கள் பயணமாக இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார்.

இலங்கை இராணுவத்தினரால் மரியாதை அணிவகுப்புடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாக கூறபடுகிறது.

இந்திய இராணுவத் தளபதியுடன் மேலும் சில உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வரவுள்ளனர். எதிர்வரும் வியாழக்கிழமை வரை அவர்கள் நாட்டில் தங்கி இருப்பார்கள்.

இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் இந்திய இராணுவத் தளபதி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, ஜெனரல் உபேந்திர திவேதி, புத்தலவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் உரை நிகழ்த்தவுள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.