யாழில் நடந்த பயங்கரம்: சிக்கிய கொலையாளி..!!
[2026-01-03 23:04:24] Views:[12]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கடந்த 01ஆம் திகதி கத்திக்குத்துக்கு இலக்காகி 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது இனம்தெரியாத நபர் ஒருவரால் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையே இவ்வாறு மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.










