yarlathirady.com

மத்திய ஆபிரிக்காவில் இலங்கை விமானப்படையின் அதிரடி செயல்..!!

[2026-01-03 22:56:11] Views:[30]

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் முன்னெடுக்கப்பட்ட சவாலான ஒரு நடவடிக்கையின் போது, இலங்கை விமானப்படையின் அமைதிகாக்கும் பிரிவினர் 14 ஆபிரிக்க இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படையின் Mi-17 ரக ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், கடந்த டிசம்பர் 31ஆம் திகதி மத்திய ஆபிரிக்கக் குடியரசின் 'Obo' பகுதியில் இருந்து, அத்தியாவசியப் பொருட்கள் வான்வழியாகக் கொண்டு செல்லப்பட்டன.

மத்திய ஆபிரிக்காவின் 'AAKG' ஆயுதக் குழுவினரின் கடும் அச்சுறுத்தல் நிலவும் 'Bambouti' பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் தளம் (TOB) ஒன்றுக்கே இந்தப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட போது, குறித்த தளம் மற்றும் ஹெலிகொப்டர் மீது AAKG ஆயுதக் குழுவினரால் உடனடித் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்தத் தளத்தின் பாதுகாப்பில் இருந்த 14 மத்திய ஆபிரிக்க இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக மீட்ட விமானப்படையினர், அவர்களை மீண்டும் 'Obo' பகுதிக்கு அழைத்து வந்தனர்.

இந்த நடவடிக்கையில் விங் கமாண்டர் நூரான் பெரேரா பிரதான விமானியாகவும், பிளைட் லெப்டினன்ட் ஷப்ரித் இக்பால் உதவி விமானியாகவும், பிளைட் லெப்டினன்ட் பிரவீன் ரத்நாயக்க விமானப் பொறியியலாளராகவும் பணியாற்றியதுடன், ஏனைய பணியாளர்களும் இதில் தீவிரமாகப் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.