புத்தாண்டில் விலையை உயர்த்திய லாஃப்ஸ் நிறுவனம்!
[2026-01-02 12:25:59] Views:[13]
புத்தாண்டு தினமான நேற்று (01) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4250 ரூபாவாகும்.
அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.










