yarlathirady.com

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு:

[2026-01-01 21:10:04] Views:[28]

ஊழலற்ற, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் நேய அரச சேவையை வழங்க முன்வாருங்கள்: வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்க்கின்ற, மக்கள் நேய அரச சேவையை வழங்குவதற்கு அனைவரும் இப்புத்தாண்டில் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் செயலகப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆளுநர் செயலகப் பணியாளர்கள் முன்னிலையில், ஆளுநர் அவர்கள் தேசியக் கொடியையும், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மாகாணக் கொடியையும் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரச உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.