யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர்!
[2026-01-01 19:28:30] Views:[11]
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாண பணிகளை, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் இன்றைய தினம் (01) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மைதானத்தின் பணிகள் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழல் காரணமாக சற்று காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது அவை மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நிர்மாணிப்பு பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 14ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










