குறிகாட்டுவான் - நெடுந்தீவு படகு சேவை இயங்காமையால் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் !
[2025-12-30 12:24:36] Views:[12]
யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் - நெடுந்தீவு பயணிகள் படகுகள் இயங்காமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், தனியார் படகினை 45000 ரூபாய் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி பயணித்த சம்பவம் இன்றும் நிகழ்ந்துள்ளது.
வருடப் பிறப்பு காலத்தை ஒட்டி அதிகளவிலான மக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (29) மாலை குறிகாட்டுவான் - நெடுந்தீவு பயணிகள் படகுகள் இயங்காமையால் பயணிகள் 45000 ரூபாய் செலுத்தி தனியார் படகு ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி பயணித்துள்ளனர்.
பண்டிகை காலத்தில் தீவுப் பகுதிகளுக்கான மேலதிகமான பயணிகள் படகுச்சேவையினை முன்னெடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் படகு சேவை தொடர்சியாக இவ்வாறான குறைபாடுகளுடனேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபை, கடற்ப்படையினருக்கு விடுத்து வருகிறோம், ஆனாலும் எது விதமான பயனும் இல்லை என நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.










