yarlathirady.com

மீண்டும் உருவெடுக்கும் காற்று சுழற்சி! தாழமுக்கம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

[2025-12-29 19:18:17] Views:[38]

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்று சுழற்சி அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 02.01.2026 அன்று இது தாழமுக்கமாக மாற்றம் பெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடுகையில்;

இலங்கையின் கிழக்கு தென்கிழக்கு திசையில், இலங்கையின் கரையோரமாக நிலவி பின் இலங்கைக்கு தெற்காக மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நேற்றையதினம்(28) கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்க தொடங்கியுள்ளது.

இன்றும் (29.12.2025) வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாளையதினம் (30.12. 2025) முதல் வடக்கு, கிழக்கு, வட மத்திய, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை பரவலடையும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 31.12.2025 முதல் 04.01.2026 வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா வட மத்திய, மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்நாட்களில் குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பதுளை, நுவரெலியா, காலி,மாத்தறை கண்டி மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களின் சில இடங்களில் 31.12.2025, மற்றும் எதிர்வரும் ஜனவரி 01, 02, 03 ம் திகதிகளில் 150 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 31.12.2025 அன்று கொஸ்லாந்தை, வெல்லவாய, புத்தள, கல்மதுல்ல, ஹப்புத்தள, அதல போன்ற பகுதிகளிலும் எதிர்வரும் 01.01.2026 அன்று வெலிப்பிட்ட, கொரவின்ன, லபுகெங்கொட, மித்தெனிய, திருகோணமலை போன்ற பகுதிகளிலும் எதிர்வரும் 02.01.2026 அன்று நாகெட்டிய, லெமஸ்தோட்ட, கொட்டபத்ம, ஏகொடவத்த, கொஸ்லாந்தை, வெல்லவாய, புத்தள, கல்மதுல்ல, ஹப்புத்தள, அதல போன்ற பகுதிகளிலும்மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த கனமழை மத்திய, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தத்தை தூண்டலாம்.

இந்த நாட்களில் கனமழையுடன் கூடிய நிலச்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். திகதி மற்றும் இடங்களில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளவும்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.