கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
[2025-12-29 19:15:20] Views:[12]
கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பேரழிவினால் பாதிக்கப்பட்ட புத்தளம் ரயில் மார்க்கத்தின் தண்டவாளப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் சிலாபம் வரையிலான ரயில்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் மாதம் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குடவேவ மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடுபிட்டி ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பு கோட்டைக்கும் சிலாபம்/ புத்தளம் இடையேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










