யாழில் முற்றுகையிடப்பட்ட விடுதி: ஆறு பெண்கள் உற்பட 8 பேர் கைது
[2025-12-28 19:13:27] Views:[15]
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இறு விடுதிகளை முற்றுகையிடப்பட்ட பொலிஸார் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பெண்கள் உற்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இயங்கி வரும் இரு விடுதிகளில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பின்போது ஆறு பெண்கள் மற்றும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.










