yarlathirady.com

நத்தார் தின விசேட பொது மன்னிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு:

[2025-12-27 21:38:11] Views:[16]

நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நத்தார் தினத்தன்று கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் சிறைச்சாலைத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில்;

விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளின் பெயர்ப்பட்டியல் உரிய அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், கைதிகள் தொடர்பாக மேலும் சில அறிக்கைகளை அமைச்சு கோரியுள்ளதாகவும், அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, வரும் நாட்களில் நத்தார் தினத்திற்கான விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.