yarlathirady.com

பாகிஸ்தானில் ஐந்து பொலிஸார் சுட்டுக்கொலை!

[2025-12-25 10:26:54] Views:[11]

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில், இனந்தெரியாத ஆயுதக் குழு ஒன்று கடந்த (23) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராக் மாவட்டத்தில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத ஆயுததாரிகள், பொலிஸாரின் வாகனத்தை வழிமறித்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து, தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்த வாகனத்திற்குத் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தை எந்தவித அமைப்போ அல்லது இயக்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறியுமாறு அவர் பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.