மின் அலங்காரங்களுடன் ஜொலிக்கு யாழ். மணிக்கூட்டு கோபுரம்..! திறந்து வைத்த ஆளுநர்:
[2025-12-24 13:18:26] Views:[19]
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றான மணிக்கூட்டு கோபுரம், நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மின் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு நேற்று இரவு கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை ஒளிரச் செய்து திறந்து வைத்தார்.
இதன் போது அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்காக சுடரை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ். மாவட்டச் செயலர் மற்றும் யாழ். மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










