yarlathirady.com

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் கடும் வீழ்ச்சி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

[2025-12-23 19:43:18] Views:[26]

இலங்கையின் வளிமண்டலத்தில் காற்றின் தரம் தற்போது கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது காற்றின் தரக் குறியீடு 150 முதல் 200 வரை பதிவாகியுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களாக இந்த வீழ்ச்சி அவதானிக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவபெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளமை போன்ற இயற்கைக் காரணங்கள் மற்றும் வாகனப் புகை, காடுகளுக்குத் தீ வைப்பு மற்றும் பிளாஸ்டிக்/பொலித்தீன் பொருட்களை எரித்தல் போன்ற மனித செயற்பாடுகள் காரணமாக இவ்வாறு காற்றின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணம் போன்ற மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பாதிப்புள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.