yarlathirady.com

பருத்தித்துறை நகரசபையின் அதிரடி நடவடிக்கை! பொலித்தீன் பாவனை முற்றாக தடை!!

[2025-12-23 19:20:50] Views:[25]

உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் எதிர்வரும் 01.01.2026 திகதி முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும், அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.

உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நகரசபை பொதுச்சுகாதார பரிசோகரினால் லஞ்ச் சீற் பாவனை தடை குறித்தும் உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கி கூறப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பருத்தித்துறை நகரசபைக்குட்ட உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாட்டில் லஞ்ச் சீற் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதுடன் 01.01.2026 திகதி முதல் முற்றுமுழுதான லஞ்ச் சீற் பாவனையை தடைசெய்யும் வகையில் மூன்று மாத கால அவகாசம் பருத்தித்துறை நகர சபையினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.