யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!
[2025-12-23 19:09:13] Views:[16]
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நல்லூர், மூத்த விநாயகர் கோவிலடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனிடமிருந்து 2 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் உடுவில் பரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து 5 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










