யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!!
[2025-12-22 19:06:09] Views:[13]
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுன்னாகம் உடுவில் பகுதியில் நேற்றிரவு 5 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










