yarlathirady.com

"பராசக்தி" வெளியீட்டு திகதி எப்போது தெரியுமா.?

[2025-12-21 19:19:06] Views:[36]

தமிழ் திரையுலகின் இரண்டு முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இரண்டு முக்கியமான திரைப்படங்கள், ஒரே காலகட்டத்தில் திரையரங்குகளை ஆக்கிரமிக்கத் தயாராகி வருகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், 2026 ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படமும் 2026 பொங்கலை குறிவைத்து தயாராகி வருகிறது. இந்த படம், சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.முன்னதாக, ‘பராசக்தி’ திரைப்படம் 2026 ஜனவரி 14ஆம் திகதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம், பொங்கல் விடுமுறையை முழுமையாக பயன்படுத்தும் வகையில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு ‘பராசக்தி’ திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு அடுத்த நாளான ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், ‘பராசக்தி’ படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா கலந்து கொண்டு, படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசும் போது, “பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார். ஆனால், படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என்பது உறுதி.”என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நிலவி வந்த குழப்பங்களுக்கு ஒரு அளவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.