காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்.
[2025-12-21 18:52:19] Views:[11]
கடந்தாக காலங்களில் மோசமான காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதன் முதற்கட்டமாக காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளையா தினம் முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் நாளாந்த ரயில் சேவைக்களும் முன்னெடுக்கப்படவுள்ளது.










