மாலைத்தீவு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவ படகுகள்.
[2025-12-20 20:51:12] Views:[16]
மாலைத்தீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்நிலைந்த இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளை மாலைதீவு கடலோர காவல்படை கைப்பற்றியது.
மாலைத்தீவுக்குள் சட்டவிரோதமாக இயங்கியதாக படகுகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை 08:30 மணியளவில்,மாலைத்தீவுக்கு கிழக்கே 51 கடல் மைல் தொலைவில் இருந்து கடலோர காவல்படையால் படகுகள் கைப்பற்றப்பட்டன.
படகுகள் குல்ஹுதுஃபுஷி நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், வழக்கு விசாரணைக்காக போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .










