யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!
[2025-12-20 20:43:58] Views:[12]
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தொடருந்து சேவைகள் நத்தாருக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இயற்கை பேரழிவால் சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் தற்போது சுமார் 95% நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு மார்க்கத்தில் கொழும்பிலிருந்து அனுராதபுரம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிழக்கு பாதையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










